Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோடையில் தலைமுடியை பராமரிக்க சில ஹேயார் பேக்குகள்

In
Updated: 05:34 GMT, Apr 29, 2016 | Published: 05:34 GMT, Apr 29, 2016 |
0 Comments
1293
This post was written by : Anojkiyan

தயிர் : உங்கள் தலைமுடி மென்மையாகவும், பட்டுப் போன்றும் காட்சியளிக்க வேண்டுமா? அப்படியெனில் கால்சியம், புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தயிரை வாரத்திற்கு 2 முறை தலைக்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள்.

மயோனைஸ் : மனோனைஸை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் வேர்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சியும் மேம்படும்.

பால் : குளிர்ச்சியான பாலை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஒரு துணியால் தலையை சுற்றிக் கொண்டு, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையால் தலைமுடி நன்கு மென்மையுடன் இருக்கும்.

ஓட்ஸ் : ஓட்ஸை பொடி செய்து பால் சேர்த்து நீர் போன்று கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, உங்கள் முடியில் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

வெள்ளை வெங்காயம் : வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, வாரத்திற்கு இரண்டு முறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து அலச, பொடுகுத் தொல்லை நீங்கி, தலைமுடியின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் மேம்படும்.

முட்டை வெள்ளைக்கரு : முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது முடியின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக கோடையில் முட்டையின் வெள்ளைக்கருவை ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

அரிசி தண்ணீர் : அரிசி கழுவிய தண்ணீரும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும், தரத்தையும் அதிகரிக்கும். மேலும் அரிசி தண்ணீர் ஸ்கால்ப்பில் உள்ள நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை தரும். முக்கியமாக அரிசி நீரைக் கொண்டு தலைமுடியை அலசி 10 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், முடி பட்டுப் போன்று இருக்கும்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg