Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலக் டோஃபு கிரேவி

In
Updated: 05:49 GMT, Apr 29, 2016 | Published: 05:49 GMT, Apr 29, 2016 |
0 Comments
1227
icon_com
This post was written by : Anojkiyan
palak-tofu-22-1461323591

நீங்கள் சப்பாத்திக்கு பலவிதமான சைட் டிஷ் செய்து சுவைத்தீருப்பீர்கள். ஆனால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு கிரேவி செய்து சுவைத்ததுண்டா?

இல்லையெனில் அந்த பாலக் டோஃபு கிரேவியை எப்படி செய்வதென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – 3 துண்டு
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
டோஃபு – 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் – தேவையான அளவு
பால் – 1/2 கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்

பசலைக்கீரை சமைப்பதற்கு…

பசலைக்கீரைஃபாலக் – 4 கப் (நறுக்கியது)
பூண்டு – 2 பற்கள்
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 5-7 நிமிடம் நன்கு கீரையை வேக வைக்க வேண்டும். பின் அதனை இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி, அரைத்து வைத்துள்ள கீரை கலவையை ஊற்றி, கிரேவி அதிகம் வேண்டுமானால் தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் 5-8 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். இறுதியில் அதில் டோஃபு சேர்த்து குறைவான தீயில் சில நிமிடங்கள் வேக வைக்கவும். அடுத்து பாலில் சோள மாவு சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், பாலக் டோஃபு ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg