Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

BID நூற்றாண்டு சர்வதேச தர விருது : வெற்றியாளராக BMICH

In வணிகம்
Updated: 09:42 GMT, Apr 29, 2016 | Published: 09:42 GMT, Apr 29, 2016 |
0 Comments
1237
icon_com
This post was written by : Anojkiyan
BMICH

உலகம் நாடுகளிலிருந்து நிபுணர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் பங்குபற்றி செயற்திறன் மற்றும் சாதனைகளையும் மிக முக்கியமாக வர்த்தகம் மற்றும் செயல்பாடுகளின் தரத்தினை அடையாளப்படுத்தும் BID நூற்றாண்டு சர்வதேச தர ERA மாநாடு இந்த வருடம் ஜெனிவா நகரில் இடம்பெற்றது.

அனைத்து செயல்பாட்டு பிரிவுகளிலும் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் குறைந்த செலவினை உருவாக்க உதவும் நிறுவனங்களின் தர செயற்திறனுக்கான அர்ப்பணிப்பை கௌரவித்து விருதுகள் வழங்கப்படுகிறது.

ஜெனீவா நகரில் இடம்பெற்ற BID தர மாநாட்டில் தங்க பிரிவில் சென்சரி சர்வதேச தர ERA விருதினை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) வென்றுள்ளது.

இந்த மண்டபமானது அத்துறையில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையிலும் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த விருதானது கடந்த வருடத்தின் வெற்றியை கொண்டாடுவதற்கான சிறந்த வழியாகவும் அடுத்த ஆண்டில் தரம் மீது முக்கிய கவனம் செலுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது.

ஜெனீவா விருதுகள் விழாவில் வெற்றியீட்டிய அனைத்து நிறுவனங்களும் இன்றைய மாற்றமடைந்து வரும் வர்த்தக சூழலில் ஏனைய நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழும் TQM மாதிரியை பின்பற்றுவதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நிறுவனங்களாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg