Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முந்திரி சிக்கன்

In
Updated: 13:44 GMT, May 27, 2016 | Published: 13:44 GMT, May 27, 2016 |
0 Comments
1255
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள் 

சிக்கன் – அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
முந்திரிபருப்பு – 1 கைப்பிடி
வெங்காயம் – 1
தக்காளி – 1
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – சிறிதளவு

செய்முறை 

சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.  தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து கொள்ளவும்.  முந்திரியில் சிறிது எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். மீதியை நன்றாக அரைத்து கொள்ளவும்.  1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதை சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக வதக்கிய பின் அதில் அரைத்த காய்ந்த மிளகாய் விழுது, சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும்.  பின்பு அதில் தேவையான அளவு உப்பு போடவும்.  அதன் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்றாக வேக விடவும்.  அடுத்து அதில் அரைத்த முந்திரி விழுது மற்றும் நறுக்கிய முந்திரியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும். சிக்கன் வெந்து கிரேவி கெட்டியாகும் வரை கிளறவும்.  கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூடான முந்திரி சிக்கன் ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg