Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகத்தில் உள்ள எண்ணெய்யை நீக்க இயற்கை முறைகள்

In
Published: 09:33 GMT, Jun 1, 2016 |
0 Comments
1236
icon_com
This post was written by :
Oily face

சிலர் சருமத்தின் அழகை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பலவகையான க்ரீம் வகைகளை பாவிப்பதுண்டு. எனினும் அவை எமது சருமத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும். எனவே, சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இயற்கையான பொருட்களையே பயன்படுத்துங்கள்.

ஆதற்காக, வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, துணியொன்றில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை துணியைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். அதேபோன்று, கற்றாழையில் உள்ள ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று இருக்கும்

வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg