Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன?

In
Published: 10:05 GMT, Jun 1, 2016 |
0 Comments
1474
icon_com
This post was written by :
மாதவிடாய் தாமதமாக காரணம்

வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பொதுவாக 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் மாதவிடாய் வருகிறது என்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. எனினும் 40 நாட்களுக்கு மேல் அல்லது வராமல் நின்று விடுகிறது என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஒரு சில காரணங்களால் மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போக கூடும். அதிக மன அழுத்தம் காரணமாக ஓமோனில் சுரப்பு குறைகிறது, இதனால் கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது தாமதம் ஆவதால் மாதவிடாய் தடைபடுகிறது. அதேபோன்று, திடீரென உடல்நிலை சரியில்லாமல் போதல் அல்லது ஏதேனும் நோயின் வெளிப்பாடாக கூட மாதவிடாய் தள்ளி போகலாம்.

அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஓமோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். புகல் வேலை மற்றும் இரவு வேலை என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும்.

மருந்து ஏதேனும் உட்கொண்டு வந்தால், அதன் பக்கவிளைவாகவும் மாதவிடாய் தள்ளி போகலாம், ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடம் கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg