Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தில் வீடுகளின் விலை குறைவடைவு : முத்திரை தீர்வை மாற்றமே காரணம்

In வணிகம்
Updated: 12:40 GMT, Jun 1, 2016 | Published: 12:40 GMT, Jun 1, 2016 |
0 Comments
1288
This post was written by :

இங்கிலாந்தில் உள்ள வீடுகளின் வருடாந்த விலை அதிகரிப்பு, கடந்த மே மாதம் முன்பிருந்ததை வட குறைவடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய கட்டிட சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம், வருடாந்த வீடுகளின் விலை அதிகரிப்பு வீதம், 4.7 சதவீதமாக காணப்பட்டது. இருப்பினும் அது, ஏப்ரல் மாதம் 4.9 சதவீதமாக காணப்பட்டதாகவும், குறித்த சதவீதம் மார்ச் மாதம் 5.7 சதவீதமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதத்தில் மாத்திரம், வீடுகளின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு 0.2 சதவீதமாகவே இருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய கட்டிட சங்கம், ‘கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் முத்திரை தீர்வை மாற்றங்கள் அமுலுக்கு வந்தமையே அதிகளவான மக்கள் மார்ச் மாதம் வீடுகளை கொள்வனவு செய்தமைக்கு காரணம் ஆகும் என தெரிவித்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg