Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காளான் மிளகு மசாலா

In
Updated: 08:24 GMT, Jun 2, 2016 | Published: 08:17 GMT, Jun 2, 2016 |
0 Comments
1240
icon_com
This post was written by :
mushroom-stir-fry

தேவையான பொருட்கள்
பட்டன் காளான் – 25
வெங்காய விதை – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 1
பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 1
சீரகத் தூள் – ½ தேக்கரண்டி
தனியா தூள் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை – 1 மேசைக்கரண்டி

செய்யும் முறை
முதலில் காளானை நீளமாக நறுக்கிக் கழுவவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி என்பவற்றை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை வகிர்ந்து வைத்துவிட்டு, கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காய விதை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 30 செக்கன்களுக்கு வதக்கவும். வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, தக்காளி சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். பிறகு காளான், தனியா தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் உப்புச் சேர்த்து, மிதமான தணலில் வைத்து காளான் நன்கு வேகும் வரை கிளறவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg