Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் அறிமுகமாகியுள்ள சிறிய ரக புதிய கார்

In வணிகம்
Updated: 14:58 GMT, Jun 2, 2016 | Published: 10:16 GMT, Jun 2, 2016 |
0 Comments
1231
icon_com
This post was written by :

தற்பொழுது இலங்கையில் அதிகமாக பாவனையில் உள்ள முச்சக்கரவண்டிக்கு பதிலாக, குறைந்த விலையில், புதிய கார் வகையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

முச்சக்கரண வண்டி தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், Qute என்ற பெயரில் இந்த புதிய வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது இது இலங்கைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியுமான இந்த புதிய வகைக் காரில், சாரதியுடன் நால்வருக்கு மிகவும் செகுசான முறையில் பயணிக்க முடியும். மேலும், இந்த வாகனம் ஒரு லீற்றர் பெற்றோலில் 36 கிலோமீற்றர் பயணம் செய்யும்.

மிக விரைவில் நாட்டில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த வாகனம், தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கான விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், இது முச்சக்கர வண்டியை விட குறைந்த விலைக்கே விற்பனையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகனம் குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில், ‘நாட்டில் தற்போது அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் காணப்படுவதாகவும், அதனால் முச்சக்கரவண்டிகளை குறைக்குமாறும் முச்சக்கரவண்டி சங்கங்கள் தங்களிடம் கோரிக்கை விடுத்தன. அதனாலேயே முச்சக்கரவண்டிகளின் விலைகளை அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, இந்த புதிய வாகனமும் மக்களின் பாவனைக்கு மிகவும் உதவும் விதத்தில் அமையும்’ என்று அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg