Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பைரவர் வழிபாடு

In ஆன்மீகம்
Published: 16:25 GMT, Jun 2, 2016 |
0 Comments
1150
icon_com
This post was written by :
பைரவர் வழிபாடு

சூரிய பகவானின் மகன்கள் எமதர்மனும், சனி பகவானும். இவர்களில் எமதர்மன் அழகானவர். சனி பகவான் சற்று ஊனமானவர். இதனால் சனி பகவானை, எமதர்மன் அவமானப்படுத்தி வந்தார். இதனால் மன வேதனை அடைந்த சனி பகவான் தனது தாயார் சாயாதேவியிடம் சென்று இதுபற்றிக் கூறி வருத்தப்பட்டார்.

அப்போது சாயாதேவி, ‘நீ! பைரவரை உள்ளன்போடு வழிபட்டு வா. அவர் உனக்கு நல்லதொரு வழியைக் காட்டுவார்’ என்று ஆலோசனை வழங்கினார். சனி பகவானும், தாயாரின் ஆலோசனைப்படியே தினமும் பைரவரை வழிபட்டு வந்தார்.

இதனால் மனம் மகிழ்ந்த பைரவர், சனி பகவானின் பெருமையை உலகத்திற்கு எடுத்துக் காட்ட, அவருக்கு ‘ஈஸ்வரன்’ பட்டம் வழங்கி, சனீஸ்வரனாக்கி, நவக்கோள்களில் சக்தி மிக்கவராக மாற்றி அருளினார். ஆகவே, சனீஸ்வர பகவானின் குருவாகிய பைரவரை வழிபாடு செய்து வந்தால், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டக சனி, ஜென்மச் சனி, அர்த்தாஷ்டமச் சனி போன்ற தோஷங்கள் விலகி ஓடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg