Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்!

In ஆன்மீகம்
Updated: 11:53 GMT, Jun 3, 2016 | Published: 11:51 GMT, Jun 3, 2016 |
0 Comments
1176
icon_com
This post was written by : Anojkiyan
kodi

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா, ஆலய பரிபாலகர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு இடம்பெற்ற திருப்பலியினைத் தொடர்ந்து கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதைதொடர்ந்து தினமும், மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலிகள் தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும்.

எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நற்கருணைப் பெருவிழா கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறும். எதிர்வரும் 13 ஆம் திகதி திருவிழாத் திருப்பலிகள் அதிகாலை 4 மணிக்கு தமிழிலும், 5 மணிக்கு சிங்களத்திலும் 6 மணிக்கு தமிழ் மொழிகளில் 7 மணிக்கு சிங்களத்திலும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

தொடர்ந்து பெருவிழா சிறப்புத் திருப்பலிகளாக காலை 8 மணிக்கு தமிழ் மொழியில் கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெறும். சிங்கள மொழியில் காலை 10 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை தலைமையில் நடைபெறும். மதியம் 12 மணிக்கு ஆங்கில மொழியில் 12 மணிக்கு பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் பியார் நியுக்யென் வான் டொட் ஆண்டகை தலைமையில் நடைபெறும்.

பெருவிழாத் திருப்பலிகளைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியார் திருச்சொரூபப் பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும். பவனியின் இறுதியில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இறுதி ஆசிர்வாதம் வழங்கப்படும். அத்துடன் வழமைபோன்று நடைபெறும் திருப்பலிகள்யாவும் இடம்பெறும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg