Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீட்டின் வாஸ்து தோஷம் விலக என்ன செய்யவேண்டும்!

In ஆன்மீகம்
Updated: 13:10 GMT, Jun 4, 2016 | Published: 13:09 GMT, Jun 4, 2016 |
0 Comments
1286
icon_com
This post was written by : Anojkiyan
bhoomi-pooja-720x480

நாம் வாழும் வீடு, நமக்கு நன்மை அளிப்பதாகவும், சுப காரியங்கள் நிகழ்வதாகவும், நோய்கள் அண்டாமலும், கடன் தொல்லை போன்ற பிரச்னைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையை வெறுப்பாக தோன்றும். முக்கியமாக வீட்டின் வாஸ்து சரியாக இருக்க வேண்டும்.

வாஸ்து தோஷம், முச்சந்தி வீடு, இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு, அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும், எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது, எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ தோஷமோ இருந்து கொண்டே இருக்கும்

இப்படிபட்ட தோஷங்கள், குறைகள் நீங்க பைரவ வழிபாடு செய்யலாம். வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். 90 நாள் என்பது ஒரு கணக்கு தான் நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை, பிரச்னை இல்லை அப்படியென்று உணரும் வரை விளக்கு போட வேண்டும் வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம்.

ஒருவேளை வீட்டுக்கு காம்போண்டு சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைபாங்க அப்படின்னு சங்கடபட்டால், வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம், (விளக்கு எரிந்து முடியும் வரை கவனம் தேவை). விளக்கு ஏற்றும் போது பைரவர் கவசம், பைரவர் காயத்ரி, பைரவர் ஸ்லோகம், ஸ்துதி, பைரவர் போற்றி என எதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்.

இவ்வழிபாட்டினைஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி (வழிபாடு வெற்றி அடைய) பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று பிறகு வீட்டுற்கு வந்து விநாயகரை வணக்கி அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்

இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், பௌர்ணமி அப்படியும் இல்லையென்றால் உங்கள் குடும்ப உறுபினர்கள் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வராத நாள் எதுவானாலும் ஆரம்பிக்கலாம். இந்த வழிபாட்டு செய்து பாருங்கள், வீட்டில் அணைத்து மங்களமும் உண்டாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg