Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரவு நேர உணவு எவ்வாறு இருக்க வேண்டும்

In
Published: 10:13 GMT, Jun 5, 2016 |
0 Comments
1231
icon_com
This post was written by :
Knight food

மனிதனின் ஆரோக்கியத்திற்காக உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவு முக்கியத்துவம் இரவு ஒயவை எடுப்பதிலும் காட்ட வேண்டும். முக்கியமாக எவ்வாறான உணவுகளை இரவு உணவாக எடுக்கலாம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை முற்றாக ஒதுக்க வேண்டும்.

இரவில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். அதேபோன்று உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் வேக வைத்த இரண்டு அல்லது மூன்று முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும். வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது.

இரவு ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும். இரவு நேரத்தில் முழு சாப்பாடு, அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் மது அருந்துவது தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரவு நேரத்தில் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg