Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிளாக் ஹெட்ஸை எவ்வாறு நீக்கலாம்?

In
Updated: 13:46 GMT, Jun 5, 2016 | Published: 10:25 GMT, Jun 5, 2016 |
0 Comments
1229
icon_com
This post was written by :
removing Black Head

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தும்.

நாள் பட்ட பிளாக்ஹெட்ஸுக்கு மிகவும் சரியான தீர்வு ஆவி பிடித்தல் தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள் விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக்ஹெட் ரிமூவரால் மெதுவாக அழுத்த வேண்டும்.

வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை துணியால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இதனைச் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் இதனை செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg