Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய நிறுவனங்கள் கொழும்பு துறைமுக நகர பணிகளில் முதலீடு

In வணிகம்
Updated: 10:57 GMT, Jun 5, 2016 | Published: 10:54 GMT, Jun 5, 2016 |
0 Comments
1203
icon_com
This post was written by :
Colombo port city

இந்தியாவின் ஐந்து முக்கியமான முதலீட்டு நிறுவனங்கள் கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த ஐந்து நிறுவனங்களும், மும்பையைத் தளமாக கொண்டு இயங்கும் நிறுவனங்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றில் மூன்று நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களாகும். எனவே அவை இதன்மூலம் பெரிய எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்படுகின்ற கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் இலங்கையின் மிகப் பெரிய ஒரு வர்த்தக நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. எனவே பல வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு இதில் உள்வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் இத்திட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்றும் நம்பப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg