Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தென் கொரியா முதலீடு

In வணிகம்
Updated: 14:36 GMT, Jun 5, 2016 | Published: 11:12 GMT, Jun 5, 2016 |
0 Comments
1268
icon_com
This post was written by :
Kankesanthurai cement factory

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளுருவாக்குவதற்கு தென்கொரிய நிறுவனம் ஒன்று 450 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீளுருவாக்கத்துக்கான பொறியியல் ஒத்துழைப்புகளை வழங்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் தற்பொழுது பல வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளுருவாக்குவது முக்கிய பணியாக கருதப்படுகின்றது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீளுருவாக்கப்படும் பட்சத்தில் வடக்கில் உள்ள பெரும் தொகையான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg