Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை – சிங்கப்பூருக்கு நன்மை அளிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

In வணிகம்
Updated: 14:25 GMT, Jun 5, 2016 | Published: 11:36 GMT, Jun 5, 2016 |
0 Comments
1206
icon_com
This post was written by :
singapore and srilanka

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் நன்மையடையும் என்று சிங்கபூர் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிங்கபூரின் வர்த்தகத்துறை அமைச்சர், இலங்கையின் பல தரப்பினருடனும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு மேம்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். அதில் இரு நாடுகளினதும் வர்த்தக உறவின் எதிர்காலம் குறித்து அதிகம் பேசப்பட்டது.

இதன்போது, இலங்கையுடனான சிங்கப்பூரின் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே தனது இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg