Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிருஷான் – கானா பாலா பாடும் ‘ஊதா பூவு கண்ணு’

In
Updated: 12:20 GMT, Jun 5, 2016 | Published: 12:18 GMT, Jun 5, 2016 |
0 Comments
2092
icon_com
This post was written by : Varothayan

நம் நாட்டு பாடகர் கிருஷான் மகேசனுடன் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கானா பாடகர் ‘கானா பாலா’ இணைந்து கலக்கியிருக்கும் ‘ஊதா பூவு கண்ணு’ பாடல் அண்மையில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றிருக்கின்றது.

இப்பாடலுக்கான இசையினை சகோதர மொழிக் கலைஞர் இராஜ் வழங்கியிருக்கின்றார். இராஜ் ஏராளமான தமிழ் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பதுடன், தென்னிந்தியாவின் சில திரைப்படங்களிலும் இசைக்கலைஞராக பங்கெடுத்திருக்கின்றார்.

ஏற்கனவே, பாடல் ஹிட்டாகியுள்ள நிலையில், அதன் காணொளி அண்மையில் வெளியாகி பலரது மனங்களையும் கவர்ந்திருக்கின்றது. கொழும்பில், நடனக்கலைஞர்கள் பலரையும் வைத்து அட்டகாசமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது பாடல். கிருஷ்ணா மாஸ்டர் நடன இயக்குனராக பணி புரிந்திருக்கின்றார்.

இப்பாடலில், ஈழத்தில் பல குறும்படங்கள் மற்றும் முழு நீளப்படங்களில் நடத்து முன்னணி நடிகராக இருக்கும் ஜெராட் நோயல் நடித்திருக்கின்றார். அவருக்கு ஜோடியாக மிதுனிகா பெர்னாண்டோ, நோயல் கிரிஷ்ரினா ஆகியோர் நடித்திருக்கின்றார்.

சதீஸ்காந்த் எழுதியிருக்கும் இப்பாடலை தென்னிந்தியப் பாடல்களுக்கு இணையாக கதிரேசன் கார்த்திக் இயக்கியிருக்கின்றார். ஒளிப்பதிவு- சிந்தக சோம கீர்த்தி, படத்தொகுப்பு : சுரேந்த் மற்றும் மாதவன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg