Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலையாளிகளைக் காட்டிக் கொடுத்த ‘ஒரு கொலை’

In
Updated: 13:07 GMT, Jun 5, 2016 | Published: 13:07 GMT, Jun 5, 2016 |
0 Comments
1477
This post was written by : Varothayan

காசுக்கு கொலை செய்யும் கூட்டம் ஒன்றைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது ஒரு கமெரா. அது தான் ‘ஒரு கொலை’ குறும்படம்.

ஏற்கனவே, சில குறும்படங்களிலேயே ஒரு சின்னக்காட்சியாக வந்த ஒரு சம்பவத்தை, ஏனோ தானோ என இழுத்துத் தள்ளியிருக்கிறார்கள். எந்தவொரு சுவாரசியமும் இல்லாமல் குறும்படம் நகர்கின்றது. படம் ஆரம்பிக்கும் போது, அந்தக் கமெராவில் இந்தக் கொலை அகப்படும் என்ற ஊகத்தை பார்ப்போருக்கு தந்த பிறகு, வீணாக 5 நிமிடங்கள் படம் நகர்கிறது.

யாழ்ப்பாணத்தில் குறும்படச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல கலைஞர்களின் ஒன்றிணைவில் வந்திருக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கின்றார் நிசாந்தன். கதை – திரைக்கதை – வசனம் : கபிலன், இசை : பத்மயன், படத்தொகுப்பு மணிவண்ணன்.

மதிசுதா, சிறில் லக்ஷ்மன், ரெக்ஷன், துஷிகரன் என பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg