Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடி கொட்டும் பிரச்சினையா? : இதோ சில வழிகள்

In
Updated: 10:37 GMT, Jun 6, 2016 | Published: 10:36 GMT, Jun 6, 2016 |
0 Comments
1209
icon_com
This post was written by :
Hair loss

சிலருக்கு முடி கொட்டும் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக அமையும். காலையில எழுந்தவுடன் தலையனையில் முடி, குளிக்கும்போது கொத்துக் கொத்தா முடி விழுதல், தலை வாரும் போது சீப்பு முழுக்க முடி என எப்பொழுதும் முடி கொட்டும் நிலையால் சில பெண்கள் அச்சமடைவதும் உண்டு.

முதல் நாள் இரவு நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் இப்படி முடி உதிர்வுப் பிரச்சினையை எதிர்கொள்வீர்கள். நல்ல தூக்கம் என்பது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்ல, தூங்கும்போது கூந்தலை கன்னாபின்னாவென வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது. காலையில் எழுந்ததும் கூந்தல் சிக்கின்றியும் கையாள எளிதாகவும் இருக்க சில வழிகள் இதோ,

தூங்கச் செல்வதற்கு முன் கூந்தலைப் பிரித்து நன்கு வாரி, சிக்கு எடுத்து விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீண்ட கூந்தல் இருந்தால் அதை நன்கு வாரி, தளர்வாகப் பின்னிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள்.

கூந்தலை எப்போதும் இறுக்கிக் கட்டிக் கொண்டோ, பின்னிக் கொண்டோ தூங்காதீர். கூந்தல் ஈரமாக இருந்தால் அத்துடன் தூங்காதீர்கள். கூந்தலில் எதையும் தடவிக் கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். எப்போதும் தூங்கச் செல்வதற்கு முன் தலையில் எண்ணெய் தடவி, மிதமாக மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலையில் அலசிவிடுவதே சிறந்தது. அப்படி எண்ணெய் வைக்கிற போது அதிகமாக வைக்காமல் மிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். கூடிய வரையில் 2 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலையணை உறையை மாற்றுங்கள். தினமும் சரியான நேரத்தில் தூங்குவதையும், போதுமான அளவு தூங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg