Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீழ்ச்சி கண்டுள்ள எச்.எஸ்.பி.சி வங்கியின் முதல் காலாண்டு லாபம்

In வணிகம்
Updated: 14:22 GMT, Jun 6, 2016 | Published: 13:53 GMT, Jun 6, 2016 |
0 Comments
1157
icon_com
This post was written by :
HSBC

உலகின் முன்னணி வங்கிகளின் பட்டியலில் உள்ள எச்.எஸ்.பி.சி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற இலாபம் 6.1 பில்லியன் டொலர்களாக குறைந்திருந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது தாம் எதிர்பார்த்த அளவை விட குறைந்த தொகையாகும் என அவ்வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் இலாபம் 14 வீத வீழ்ச்சியைக் காட்டுகின்றது என்று எச்.எஸ்.பி.சி வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் லண்டனில் உள்ள எச்.எஸ்.பி.சியின் தலைமையகம் கருத்து தெரிவிக்கையில், சவால் நிறைந்த சந்தையில் நிலைத்து நிற்கும் செயல்திறன் தமக்கு உள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் எமது இலாபத்தில் வளர்ச்சி காணும் நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இந்த வருடம் பொதுவாகவே உலக நிதி சந்தைகளில் பாரிய வீழ்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அனைத்து துறைகளினதும் இலாபத்தில் சரிவு காணப்பட்டதாக சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg