Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனித ரமழான் தலைப்பிறை இலங்கையில் தென்பட்டது : நாளை நோன்பு ஆரம்பம்

In ஆன்மீகம்
Published: 15:50 GMT, Jun 6, 2016 |
0 Comments
1233
icon_com
This post was written by :
c1

முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) மாலை தென்பட்டுள்ளது. எனவே இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் நாளை ரமழான் மாத நோன்பை ஆரம்பிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

ரமழான் மாத்திற்கான தலைப்பிறை மத்திய கிழக்கு, ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளிலும் நேற்று தென்பட்ட நிலையில், அங்கு இன்று நோன்பு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் நேற்று இலங்கையில் தலைப்பிறை தென்படவில்லை.

இந்நிலையில், இன்று மாலை இலங்கையில் புனித ரமழான் மாத தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, நாட்டின் பல பகுதிகளிலும் ரமழான் தலைப்பிறையைக் காணக் கூடியதாக இருந்ததாகவும், இதன் காரணமாக நாளை இலங்கையில் நோன்பு ஆரம்பிக்கப்படுகின்றது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

moon 01
moon 02
moon 03
moon 04
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg