Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழைய சிமெந்துக்களை புதிய விலைக்கு விற்பனை செய்தால் கைது

In வணிகம்
Updated: 09:33 GMT, Jun 7, 2016 | Published: 07:02 GMT, Jun 7, 2016 |
0 Comments
1265
This post was written by : Shailu

பழைய சிமெந்து தொகையினை புதிய விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கைது செய்வதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அண்மையில் 5 நிறுவனங்களின் சிமெந்து மூட்டையின் விலை 60 ரூபாவால் அதிகரிக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதி வழங்கியது.

எனினும் விற்பனையாளர்கள் பழைய சிமெந்து தொகையினை புதிய விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வண்ணம் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இவ்வாறன விற்பனையாளர்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 011 77 55 482 அல்லது 83 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg