Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

EU-விலிருந்து வெளியேறினால் பிரித்தானிய வர்த்தகம் பாதிக்கும்

In வணிகம்
Updated: 06:59 GMT, Jun 8, 2016 | Published: 06:59 GMT, Jun 8, 2016 |
0 Comments
1266
icon_com
This post was written by : Risha
UK11

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுமாயின், பல நிச்சயமற்ற வர்த்தக உறவுகளை சந்திக்க நேரிடும் என உலக வர்த்தக அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் பிரித்தானிய வணிகப் போட்டித்தன்மை பாதிக்கப்படும் என உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதே பேச்சுவார்த்தை வலிமை பிரித்தானியாவிற்கு இல்லை எனத் தெரிவித்த அவர், பிரித்தானியாவின் வெளியேற்றம் பாரிய பொருளாதார பின்விளைவை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதா, இல்லையா என்பது குறித்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg