Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சளி- இருமலுக்கு அருமருந்தாகும் கார மிளகு

In
Updated: 07:12 GMT, Jun 8, 2016 | Published: 07:12 GMT, Jun 8, 2016 |
0 Comments
1258
icon_com
This post was written by : Risha
pep

சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் ஆகியவற்றிற்கு அருமருந்தாக அதிக காரத்தன்மை கொண்ட மிளகு காணப்படுகிறது.

தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும்.

மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

சளி, தடுமன் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு கரண்டி எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை கரண்டி பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலேயே நல்ல குணம் காணலாம்.

பசியில்லாமலிருந்தால், ஒரு கரண்டி மிளகை வறுத்துப் பொடிசெய்து கைப்பிடியளவு துளசி இலையைப் போட்டுக் கொதிக்க வைத்து, சூடு ஆறியவுடன் தேனில் கலந்து குடித்தால் சரியாகும்.
நன்றாக சளி பிடித்துக் கொள்ள தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg