Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரவா பணியாரம்

In
Updated: 07:31 GMT, Jun 8, 2016 | Published: 07:23 GMT, Jun 8, 2016 |
0 Comments
1203
icon_com
This post was written by : Risha
maxresdefault

தேவையான பொருட்கள்

வெள்ளை ரவை – 1 கப்
அரி மா – ¼ கப்
உப்பு – தேவையான அளவு
புளித்த தயிர் – அரை கப்
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
வெங்காயம்
கறிவேப்பிலை
பச்சைமிளகாய்
எண்ணெய்

செய்முறை
1 கப் வெள்ளை ரவை, 1/4 கப் அரிசிமாவு, உப்பு இவற்றை கலக்கவும். அரை கப் புளித்த தயிர் சேர்த்து கலந்து, தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கி, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

குறிப்பு:
10 நிமிடத்தில் செய்ய வேண்டும் என்றால், வெதுவெது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும், சீக்கிரமாக ஊறிவிடும்.

பின் ஒரு பாத்திரத்தில் 2 கரண்டி; எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இட்டு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, அடுப்பை அணைத்து, கொத்தமல்லி சேர்த்து, பிரட்டி ஆறவிடவும்.

குறிப்பு:
விருப்பப்பட்டால் காய்களை பொடியாக நறுக்கி, வெங்காயத்தோடு சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்கவும்.

பின்னர், ஆறியதும், மாவில் கொட்டி, சிறிது சமையல் சோடா சேர்த்து கலந்து, பணியாரம் செய்யவும். பஞ்சு போல் மெத்தென இருக்கும். நிமிடத்தில் தயாராகும் தேங்காய் சட்னியுடன் பறிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg