Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டஃப் பை ஸ்டஃப் முர்தபா

In
Updated: 07:36 GMT, Jun 8, 2016 | Published: 07:35 GMT, Jun 8, 2016 |
0 Comments
1202
icon_com
This post was written by : Risha
_89234502_88902155

தேவையான பொருட்கள்

பரோட்டாவிற்கு

மைதா – இரண்டு கப்
உப்பு – சிறிது
டால்டா உருக்கியது – ஒரு மேசை கரண்டி
முட்டை – ஒன்று

பில்லிங்கிற்கு

எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
மட்டன் கீமா – 200 கிராம் (இதில் சிக்கன் மட்டன் கீமா, பீஃப் கீமா எது வேண்டுமானாலும் போடலாம்.)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – ஒன்று
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் – இரண்டு
கொத்து மல்லி தழை – ஒரு கைப்பிடி
முட்டை – மாவில் தடவ தேவையான அளவு
எண்ணை (அ) பட்டர் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை
முதலில் மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து சிறிது தளர்த்தியாக குழைத்து பெரிய உருண்டைகளான உருட்டி ஒவ்வொன்றிலும் எண்ணை தடவி ஊறவைக்கவும்.

எண்ணெயை காயவைத்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், அடுத்து தக்காளி, கொத்தமல்லி தழை, சிறிது மட்டன், மசாலா வகைகள் இப்படி எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி கடைசியாக கரம் மசாலா, கொத்துமல்லி தூவி கிளறி கலவையை ஆறவிடவும்.

பின்னர், மாவு நன்கு ஊறி இருக்கும் அதை பெரிய வட்டவடிவமாக திரட்டவும். மாவில் தடவ தேவையான அளவு முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து கலக்கி கொள்ளவும்.

வட்டமாக திரட்டிய மாவில் முட்டை கலவையை பரவலாக தடவி, ஆறிய மட்டன் பில்லிங்கை ஒன்னறை மேசை கரண்டி அளவு வைத்து நல்ல பரவலாக வைத்து சதுர வடிவமாக மடிக்கவும்.

தட்டு சூடானதும் எண்ணை ஊற்றாமல் முதலில் சதுர வடிவமாக தயாரித்ததை போட்டு லேசாக சூடானதும் திருப்பி போட்டு நன்கு கையால் அழுத்தி விடவும் இப்படி செய்வதால் எல்லா பக்கமும் சமமாக இருக்கும்.

அதன் பின்னர் எண்ணெய் கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி நன்கு வெந்து சிவந்து வரும் போது ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg