Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்!

In
Updated: 05:40 GMT, Jun 10, 2016 | Published: 05:40 GMT, Jun 10, 2016 |
0 Comments
1282
icon_com
This post was written by : Anojkiyan
Sweet-Potato45866

சிறுநீர் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறப்பான மருந்து என்று சர்க்கரை வள்ளிக்கிழங்கைச் சொல்லலாம். சிறுநீர் வலியோடு வெளியாதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறிது நேரம்கூட அடக்க இயலாமை, சிறுநீர்த்தாரை எரிச்சல் ஆகிய துன்பங்களைப் போக்குவதற்கு அற்புத மருந்தாக உதவுகிறது வள்ளிக்கிழங்கின் வேர்ப்பகுதி.இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற, தாகத்தை தணிக்கவல்ல மருந்து வள்ளிக்கிழங்கு என்று சொன்னால், அது மிகையில்லை.

இதன் முழுத் தாவரமும் காய்ச்சலைத் தணிக்கவும், சரும நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் பயன்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைப்பதால் அதனுடைய இனிப்புச்சுவை கூடுவதை அறிந்திருப்போம். இதற்குக் காரணம், வேக வைக்கும்போது வள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து Maltose என்னும் இனிப்புப் பொருளாகவும் Dextrins எனும் இனிப்புப் பொருளாகவும் மாறுபடுவதுதான்.

வள்ளிக்கிழங்கு மருந்தாகும் விதம் வள்ளிக்கிழங்கின் இலையைத் தீநீர் இட்டுக் குடிக்கக் கொடுப்பதால் வயிற்றிலுள்ள கீரிப்புழுக்கள், நாக்குப்பூச்சி என்னும் மண் புழுக்கள், நாடாப் புழுக்கள் உட்பட தேவையற்ற புழுக்கள் உடலிலிருந்து வெளியேறும். வள்ளிக்கிழங்கின் சாறு எடுத்து ஏதேனும் ஓர் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி மேற்பூச்சாகப் பயன்படுத்துவதனால் புண்கள் விரைவில் ஆறும். தொழுநோய் புண்களையே ஆற்றும் வல்லமை வள்ளிக்கிழங்கின் சாறுக்கு உண்டு. இதன் இலையை அரைத்து மேற்பூச்சாகப் பூசினால் தேள் கடியினால் உண்டாகும் வலி உடனே குறையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg