Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலாபம் மானாவரி ஸ்ரீ இராமலிங்க சுவாமி ஆலய மஹோற்சவம் இன்று!

In ஆன்மீகம்
Updated: 10:02 GMT, Jun 10, 2016 | Published: 10:01 GMT, Jun 10, 2016 |
0 Comments
1165
icon_com
This post was written by : Anojkiyan
siva

வரலாற்று சிறப்பு மிக்க சிலாபம் மானாவரி ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் சமேத இராமலிங்க சுவாமி ஆலய மஹோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) உட்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

ஆலய குரு பிரம்மஸ்ரீ ஜெ.ஞானசந்திரக்குருக்கள் தலைமையில் ஆரம்பமாகிய உற்சவம், தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறும்.

இராவணன் சீதையை இலங்கைக்கு கவர்ந்து கொண்டு வந்த பின் ஸ்ரீராம பிரான் சீதையை மீட்கவர, இராவண சம்ஹாரத்தின் போது இராவணனால் பிரம்மஹஷ்தி தோஷம் ஏவப்பட்டது.

அந்த பிரம்மஹஷ்தி தோஷம் நீங்குவதற்கு ஸ்ரீ இராம பிரான் மணலை வாரிப் பிடித்து பூஜை செய்து வணங்கப்பட்ட லிங்கம் ஸ்ரீ இராமலிங்கம் என கூறப்படுகின்றது.

இது 12ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்த லிங்கமானது ஒன்று இந்தியாவில் இராமேஸ்வரத்திலும், மற்றையது இலங்கையிலுள்ள மானாவரியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

siva 2

siva 3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg