Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிகணினிகளை வழங்க கல்வியமைச்சுடன் கைகோர்த்துள்ள சிங்கர்!

In வணிகம்
Published: 11:57 GMT, Jun 10, 2016 |
0 Comments
1159
icon_com
This post was written by : Anojkiyan
Singer

நாட்டில் நீடித்து உழைக்கின்ற நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் முன்னணியில் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி இலங்கை அரசாங்கமானது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகளை வாங்க வட்டியற்ற கடன்களை வழங்கும் திட்டத்தின் கீழ் நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிகணினிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சுடன் கைகோர்த்துள்ளது.

அரசாங்கம் முன்வைத்த 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அமைவாக, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, நிதி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கீழ்ப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இச்செயற்திட்டம் அமுலாக்கம் செய்யப்படுகின்றது.

இந்த பங்குடமையினூடாக உயர் கல்வி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய இரு பெரும் வங்கிகளின் மூலமாக வட்டியற்ற விசேட கடன் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு DELL மற்றும் Singer X-Series மடிகணனிகளை சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் வழங்கவுள்ளது.

நவீன Intel 6th Generation i3 மற்றும் i5 Processors கொண்ட உயர் தொழிற்படுதிறனுடனான மடிகணினிகள் உட்பட பல்வேறு வகையான மடிகணினிகளைத் தெரிவுசெய்யும் வாய்ப்பை மாணவர்கள் கொண்டுள்ளதுடன் இந்த மடிகணினிகள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அசல் Windows 10 operating system ஆகியவற்றையும் கொண்டுள்ளன.

சிங்கர் நிறுவனத்திடமிருந்து மடிகணினி ஒன்றை வாங்க விரும்புகின்ற எந்தவொரு மாணவரும் நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழத்திற்கும் அருகாமையிலுள்ள எமது கிளைகளில் அவற்றை சௌகரியமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. DELL மற்றும் Singer X-Series மடிகணினிகளை மாணவர்கள் தெரிவுசெய்ய முடிவதுடன் அவற்றிற்கு 3 வருட நம்பிக்கையுடனான உத்தரவாதமும் நாடெங்கிலுமுள்ள எமது சேவை வலையமைப்பின் மூலமான விற்பனைக்குப் பின்னரான பேணற் சேவைகளும் கிடைக்கப் பெறுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg