Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது – நெற் சந்தைப்படுத்தல் சபை

In வணிகம்
Published: 11:50 GMT, Jun 11, 2016 |
0 Comments
1149
icon_com
This post was written by : Anojkiyan
rice

சீரற்ற வானிலையால் பல ஏக்கர் விவசாய செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், எதிர்காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

தேவையான நெல், ஏற்கனவே களஞ்சியங்களில் உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார்.

2015 – 2016 பெரும்போகத்தில் 135,000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த போகங்களின்போது கொள்வனவு செய்யப்பட்டு, எஞ்சியுள்ள பழைய நெல் தொகையை விலைமனு கோரல் மூலம் விற்பனை செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும், கூறினார்.

புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல், உடனடியாக விநியோகிக்கப்பட மாட்டாது என்றும், தேசிய ரீதியாக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதுகுறித்து ஆராய்ந்து போதுமானளவு நெல்லை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் சுமார் 30,000 ஏக்கர் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg