Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அன்னாசி அல்வா

In
Updated: 04:24 GMT, Jun 12, 2016 | Published: 04:23 GMT, Jun 12, 2016 |
0 Comments
1237
icon_com
This post was written by : Elakkiya
pineapple-halwa_3_1

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த அன்னாசி – பாதி
சீனி – ஒன்றரை கிலோ
மைதா – 300 கிராம்
நெய் – 300 கிராம்
முந்திரி – 50 கிராம்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு.

செய்முறை

அன்னாசியை தோல் சீவி சிறிய துண்டு மாத்திரம் எடுத்து அதனை மேலும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். மற்றைய பாதியை மிக்சியில் நான்றாக அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

மைதாவை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு வைத்திருந்து, மறுநாள் தண்ணீரை வடித்து, கீழ்படிந்துள்ள மாவில் மீண்டும் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பாலெடுத்துக் கொள்ளுங்கள்.

மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சீனியை பாகு காய்ச்சுங்கள். நூல் பதம் வரும்போது அதில் மைதா பால் ஊற்றிக் கிளறுங்கள். இடையிடையே நெய் மற்றும் வண்ணப்பொடியை சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.

எல்லாம் ஒன்றிவரும் போது அன்னாசி ஜூஸை ஊற்றி, ஏலக்காய் தூள், அன்னாசி துண்டுகளைக் கொட்டி கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத அளவுக்கு நீர்த்தன்மை வற்றி வரும்போது முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். அன்னாசி அல்வா ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg