Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதுகுவலியை போக்கும் ஆசனம்

In
Updated: 04:41 GMT, Jun 12, 2016 | Published: 04:38 GMT, Jun 12, 2016 |
0 Comments
1177
icon_com
This post was written by : Elakkiya
d

அதிகமாக வேலைக்கு செல்லும் பெண்கள் தொடர்ச்சியாக கதிரையில் இருப்பதால் முதுகுவலியால் அவதிப்படுவது உண்டு. பெண்கள் மாத்திரமல்ல ஆண்களும் முதுகுவலியால் அவதிப்படுவதுண்டு.

இவ்வாறு முதகுவலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்துவந்தால் விரைவில் குணமடையலாம். விரிப்பில் முதுகு தரையில்படும்படி படுக்கவும். கால்களை மடித்து, பாதங்களை மேலே உயர்த்தி இரு முட்டிகளையும் இரு உள்ளங்கைகளால் பிடிக்கவும். முட்டிகளுக்கு இடையில் இடைவெளி இருக்கட்டும். பாதங்கள் தளர்வாக இருக்கட்டும்.

இந்த நிலையில் மூச்சை இழுத்து, ஓரிரு விநாடிகளுக்குப்பின் மூச்சை வெளியே விட்டபடி இரு முட்டிகளையும் மார்புப் பக்கம் நகர்த்துங்கள். இப்போது கால்கள் நன்கு அகண்டு, முழங்கைகள் தரையைத் தொடும். ஓரிரு விநாடிகளுக்குப்பின், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முட்டிகளை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதுபோல ஆறு முறை செய்யவும்.

பலன்கள் :
அடிவயிறு, கீழ் முதுகு ஆரோக்கியம் பெறும். தோள்பட்டை நெகிழ்வுத்தன்மை அடையும். முதுகுவலி குறையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg