Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காகங்களுக்கு அன்னமிடுவது ஏன்?

In ஆன்மீகம்
Updated: 05:32 GMT, Jun 12, 2016 | Published: 05:31 GMT, Jun 12, 2016 |
0 Comments
1173
icon_com
This post was written by : Elakkiya
61bfee279f0e534bdc1ffbc6700e322e_13800992911

தை மாதம் முதலாம் திகதி சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது போன்று பொங்கலுக்கு அடுத்த நாள் காளை மாடு மற்றும் பசுக்களுக்கும் பொங்கல் வைப்பதுண்டு. அதேநாளில் ‘காணுப் பிடி’ என்று சொல்லப்படும் காகங்களை வழிபடும் நிகழ்ச்சியை கிராமங்களில் காணலாம். அன்று குழந்தைகளும் பெண்களும் காகங்களுக்கு சோறு வைக்கப் போவது வழக்கத்தில் உள்ளது.

குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் காகங்களை வழிபடுவது வழக்கம். தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழவும் இந்தக் காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

இதன்போது திறந்தவெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு சோறு எடுத்து வைத்து, காகங்களை ‘கா…கா…’ என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.

அவர்களின் அழைப்பினை ஏற்று காகங்களும்; பறந்துவரும். அங்குவந்த காகங்கள்; தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும். அவை உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காகங்களை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg