Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடவுள் ஒருபோதும் சாத்தானை படைக்கவில்லை:பைபிள் கூறும் விளக்கம்

In ஆன்மீகம்
Updated: 06:11 GMT, Jun 12, 2016 | Published: 06:10 GMT, Jun 12, 2016 |
0 Comments
1211
icon_com
This post was written by : Elakkiya
28-1461827708-2-xchrist3-26-14

இன்றைய உலகில் கிறிஸ்துவர்கள், கடவுள் சாத்தானைப் படைத்தார் என்று நம்புகின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல! கடவுள் லூசிபையர் என்கிற சக்தி வாய்ந்த அபிஷேகத் தேவதையை உருவாக்கினார்.

அவருக்கு கடவுளின் படைப்புகளில் திருப்தி இல்லை. அவர் கடவுளை விட அதிக சக்தி பெற விரும்பினார். மேலும் அவர் மற்ற எல்லா தூதர்களை விடவும் மேலே செல்ல விரும்பினார். எனவே அவர் கடவுளை எதிர்க்க தொடங்கினார். பெரும்பாலான மக்கள், லூசிபையர் மூன்றில் ஒரு பங்கு தேவதைகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு கடவுளை எதிர்க்கத் தொடங்கினார் என நம்புகின்றார்கள். ஆனால் பரலோகத்தில் லூசிபையர் கடவுளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர் பூமிக்குத் திரும்பினார் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடவுள் மனிதனுக்கு செய்ததைப் போன்று, அவரது படைப்பு வேறு எந்த படைப்புகளுக்கு எதுவும் செய்ததில்லை என சாத்தான் நம்பியதே, லூசிபையர் கடவுளுக்கு எதிராக திரும்பியதற்கான மற்றொரு காரணம் எனவும் நம்பப்படுகின்றது.

அத்துடன் தேவனால் மனிதன் பூமியிலே உருவாக்கப்பட்ட போது, மனிதன் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டதுடன், மனிதனுக்கு இந்த பூமியின் மீது நிபந்தனையற்ற அதிகாரம் வழங்கப்பட்டது. இவையும் லூசிபையரின் கோபத்திற்கு காரணமாக கூறப்படுகின்றது.

கடவுள் ஏன் சாத்தானை படைத்தார் என்பதற்கான அனைத்து காரணங்களையும் பரிசுத்த பைபிள் வெளியே சொல்வதில்லை. ஆனால் இதுவரை கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் மனிதனின் நன்மைக்கே என்பதை நாமாக அறிந்து கொள்ள வேண்டும்.

பரிசுத்த பைபிளின் பிரகாரம், சாத்தான் என்பது ஒரு நபர், ஒரு மனிதன், மற்றும் ஒரு ஆன்மா ஆகும். அவர் ஒரு உண்மையான தனிநபர் என்பதால், சாத்தான் என்பது ஒரு கதை அல்ல. இந்த பூமியில் பரலோக தந்தையுடன் சேர்ந்து ஒரு பிசாசு, மற்றும் பல்வேறு பேய்கள் இருந்ததாகவும் பரிசுத்த பைபிள் சொல்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg