Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்து மதத்தின் புனித நூல்களும் முக்கியத்துவமும்

In ஆன்மீகம்
Updated: 06:32 GMT, Jun 12, 2016 | Published: 06:31 GMT, Jun 12, 2016 |
0 Comments
1167
icon_com
This post was written by : Elakkiya
11-1436603540-1red-thread

புனித நூல்களை அணிவது இந்துக்களின் ஒரு பொதுவான நடைமுறையாகும். கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு போன்ற இடங்களில் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிற கயிறுகளை கட்டி இருப்பதை அவதானிக்கலாம்.

ஒவ்வொரு புனித நூலும் இந்து மதத்தில் ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இவை கண் திருஷ்டி, நல்ல உடல் நிலை, செழிப்பு ஆகியவற்றிற்காக உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருக்கும்.

இந்து மதத்தில் உள்ள இந்த புனித கயிறுகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அனைத்துக் கயிறுகளையும் எல்லோராலும் அணிய முடியாது. எடுத்துக்காட்டாக மஞ்சள் கயிறு அல்லது மாங்கல்யமானது திருமணமான பெண்களால் மட்டுமே அணிய முடியும்.

சிவப்பு நிற கயிறு : ஆண்களும் பெண்களும் அணியும் இந்த சிவப்பு நிற நூல், நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பை குறிக்கும். இந்த சிவப்பு கயிறானது ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு வலது கையிலும், திருமணமான பெண்களுக்கு இடது கையிலும் கட்டப்படும்.

கறுப்பு கயிறு: தீயவற்றின் பார்வையிலிருந்து தரும் பாதுகாப்பை குறிக்கும். கறுப்புக் கயிறானது குழந்தைகளுக்கு இடுப்பில் அணிவிக்கப்படுகிறது. இது கண் திருஷ்டி மற்றும் தீயவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

செம்மஞ்சள் அல்லது காவி நிறக் கயிறுகள் : மணிக்கட்டில் கட்டப்படும். புகழ், அதிகாரம் சேர்க்கும் என்றும், தீயவற்றிலிருந்து பாதுகாப்பு தரும் என்றும் நம்பப்படுகிறது.

வெள்ளை நூல்: புனித வெள்ளை நூல் உபநயன விழாவோடு தொடர்புடையது. வெள்ளை நிறம், தூய்மையை குறிக்கும்.

மஞ்சள் கயிறு : மஞ்சள் கயிறு என்பது திருமணத்தின் சின்னமாகும். திருமண நாளின் போது பூசாரி வேத மந்திரங்கள் ஓத மஞ்சள் கொண்டு செய்யப்பட்ட மஞ்சள் கயிறு மணமகளின் கழுத்தில் கட்டப்பட்டு மூன்று முடிச்சு போடப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg