Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலில் விநாயகரை வணங்கும் வழக்கம் உருவானது எவ்வாறு?

In ஆன்மீகம்
Updated: 07:23 GMT, Jun 12, 2016 | Published: 07:17 GMT, Jun 12, 2016 |
0 Comments
1250
icon_com
This post was written by : Elakkiya
ganesha-dancing-love-wallpaper1

இந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள். அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுளாக காணப்படும் விநாயகர், தீயவற்றை அழிக்கும் கடவுளாகவும் வணங்கப்படுகிறார்.
யானைத் தலை அறிவின் அம்சமாகவும், நீண்ட காதுகள் அவருக்கு அனைத்து விஷயங்களும் கேட்கும் என்பதற்கான சின்னமாகவும் விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

எந்த செயலும் செய்வதற்கு முன்னரும் விநாயகரை வணங்குவது பழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட எல்லா வேலைகளுமே விநாயகருடனே ஆரம்பிக்கின்றன.

கணபதி உபனிடதத்தின் படி, பிராகிருதி எனப்படும் இயற்கையின் படைப்பிற்கும், புருஷா எனப்படும் விழிப்புணர்வுக்கும் முன்பே விநாயகர் தோன்றிவிட்டாராம். இதனால் தான் அவர் முதன்மைக் கடவுளாக வணங்கப்படுகிறார் என்பதை அறியலாம்.

புராணங்களின் அடிப்படையில், வாயிலைக் காக்குமாறும், யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் கணபதியை பார்வதி உத்தரிவிட்டமைக்கு அமைய அங்கே வந்த சிவனை கணபதி தடுக்கவும் கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை வெட்டிவிட்டாராம். கணபதியின் அலறலைக் கேட்ட பார்வதி ஓடிவந்து, அவரின் நிலையை கண்டு கோபம் கொண்டாராம்.

தன் மகனின் நிலையைக் கண்டு பார்வதி வருந்தியதைக் கண்ட சிவன், கணபதிக்கு விஷேட சக்திகளை வழங்கி, எந்த ஒரு வேலையையும் கணபதியை முதலில் வணங்காது மேற்கொண்டால் வெற்றி பெறாது என்று வாழ்த்தினாராம். அன்றுமுதல் முதற்கடவுளாக எந்த விஷயத்திலும் கணபதியை வணங்கும் வழக்கம் ஆரம்பித்தது என்கின்றனர்.

யோக சித்தாந்தங்களின் படி, முலாதாரச் சக்கரத்தில் இருந்தே நமது பொருள் மற்றும் ஆன்மீக வாழ்க்கை ஆரம்பிக்கின்றது. எனவே நமது வாழ்க்கையை பிரச்சனைகள் இன்றி முழுமையாக வாழ, எந்த விஷயத்திற்கு முன்பும் கணபதியை வணங்குதல் அவசியம் என்கிறார்கள்.

வாழ்க்கையின் எந்த விஷயமும் பொருள் மற்றும் ஆன்மீகம் என்ற இரு விஷயங்களுக்குள் அடங்கிவிடுவதாக யோகிகள் நம்புகிறார்கள். பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக அவர்கள் நம்புகிறார்கள். பொருள் சார்ந்த மகிழ்ச்சிகளையெல்லாம் அளிக்கும் அதே நேரத்தில், உலகின் சகல துன்பங்களில் இருந்து, அவர் நம்மை காப்பாதாகவும் நம்புகிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg