Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை

In ஆன்மீகம்
Updated: 13:23 GMT, Jun 12, 2016 | Published: 07:27 GMT, Jun 12, 2016 |
0 Comments
1151
icon_com
This post was written by : Elakkiya
3a8118af-fb90-41e8-8e38-48db217b1e13

வடக்கிலிருந்து கதிர்காமத்தை நோக்கிய 400 கிரோமீற்றர் பாதயாத்திரை நேற்று (சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது.

கடந்த மே மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கி கே.வேல்சாமி தலைமையில் கால் நடையாக ஆரம்பித்த இந்த பாதையாத்திரியை கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மற்றும் மூதூர் வாகரை வழியாக மட்டக்களப்பை வந்தடைந்தது.

இந்த பாதயாத்திரையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா உட்பட பல பாங்களில் இருந்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கலாக 120 பக்தர்கள் பங்கு கொண்டுள்ளனர்.

இவர்கள் இந்து ஆலயங்களில் இரவுப்பொழுதை கழித்து உகந்தை காட்டுவழியாக எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மட்டக்களப்பிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பாதயாத்திரை ஆரம்பித்துள்ளது.

f19bd377-eddd-4da6-bf51-2b6345eb8f22
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg