Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய ‘வோல்மார்ட்’ நிறுவனம் கடன் அட்டைகளை ஏற்காது

In வணிகம்
Updated: 10:47 GMT, Jun 12, 2016 | Published: 10:40 GMT, Jun 12, 2016 |
0 Comments
1256
This post was written by : Elakkiya

கடன் அட்டை நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து கனேடிய சில்லறை வணிக நிறுவனமான ‘வோல்மார்ட்’ நிறுவனம் இனி கடன் அட்டைகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.

கடனட்டை கொள்முதலுக்கு பயன்படுத்தப்படும் கட்டணம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதிக்கு பின்னர் வாடிக்கையாளர்கள் விசா அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது என அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த நடைமுறை நாடுமுழுவதும் படிப்படியாக கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வோல்மார்ட்’ நிறுவனத்துக்கு கனடா முழுவும் சுமார் 370 கிளை நிறுவனங்கள் உள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஒவ்வொரு சூப்பர் மார்கெட்டிலும் வருடம் தோறும் கடனட்டை கட்டணமாக 100 டொலர் அறவிடப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு இந்த கட்டணம் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து கடன் அட்டை பாவனையாளர்களிடமும் விற்பனை செலவில் 1 முதல் 2.5 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. பொதுவாக விசா மற்றும் மாஸ்டர்காட்களுக்கு பயன்படுத்தப்படும் கடனட்டை வகையை பொறுத்து வெவ்வேறுபட்ட கட்டணம் அறவிடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg