Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேயிலை, இறப்பர் செய்கைகளுக்கான உரமானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

In வணிகம்
Updated: 11:19 GMT, Jun 12, 2016 | Published: 11:18 GMT, Jun 12, 2016 |
0 Comments
1185
icon_com
This post was written by : Elakkiya
seedcompost011

தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை செய்கைகளுக்கான உரமானியம் வழங்கும் நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஒரு ஹெக்டேயருக்கு குறைந்த காணியில் தேயிலை மற்றும் தென்னை செய்கை மேற்கொள்ளும் செய்கையாளர்களுக்கான ஒரு வருட உரமானிய பணம் , அவர்களில் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தேயிலை செய்கையாளர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாவிற்கான உரமானிய காசோலையும், தென்னை செய்கையாளர்களுக்கு 9 ஆயிரம் ரூபா உரமானிய காசோலையும், இறப்பர் செய்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவிற்கான உர மானிய காசோலையும் வங்கியில் வைப்பிலிடப்படவுள்ளது.

உர மானியத்திற்கு பதிவு செய்துள்ள 80 வீதமான விவசாயிகளுக்கான காசோலைகள் நாளை அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட பயிர்செய்கைகளுக்காக 2,194.4 மில்லியன் ரூபா நிதி திறைச்சேரியூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg