Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெஷல் கட்லெட்

In
Published: 06:56 GMT, Jun 13, 2016 |
0 Comments
1305
icon_com
This post was written by :
Special cutlat

தேவையான பொருட்கள்
கரட் துருவல் – 1 கப்
பீட்ரூட் துருவல் – 1 கப்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 4
வெங்காயம் – 2
இஞ்சி-பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மைதா – சிறிது
பிரெட் தூள் – சிறிது
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடலை மாவு அல்லது பொட்டுக்கடலைத் தூள் – ½ கப்

செய்யும் முறை
கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி காய வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, சிட்டிகை உப்பு என்பவற்றை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, கரட் துருவல், பீட்ரூட் துருவல் சேர்க்கவும். பின் நன்றாக வதங்கியதும், உருளைக்கிழங்கு சேர்த்து, மேலும் சிறிது உப்பு சேர்த்துக் அவற்றைக் கிளறவும்.

இறுதியில் கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவை கட்டிகள் இன்றி சலித்து, கலவையில் தூவி, திரண்டு வந்ததும் இறக்கவும். இதை சின்னச் சின்ன உருண்டைகளாகவோ அல்லது விருப்பமான வடிவிலோ தட்டவும். மைதாவை தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொண்டு, கட்லெட்டுகளை அதில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg