Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாயை எவ்வாறு சுத்தமாக வைக்கலாம்?

In
Published: 07:11 GMT, Jun 13, 2016 |
0 Comments
1260
icon_com
This post was written by :
Clean tooth

பொதுவாக அனைவரும் தமது வாய் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்துவர். சிலருடன் கதைக்கும்பொழுது, அவர்களது வாயில் இருந்து வரும் வாடையின் காரணமாக ஏனையவர்கள் அவர்களை நெருங்க மாட்டார்கள். எனவே வாயை எவ்வாறு சுத்தமாக வைக்கலாம் என்று பார்ப்போம்.

சில பற்கள் அல்லது முழுவதும் பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது அந்த பற்தொகுதியை கழற்றி, பற்பசை கொண்டு உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும்.

பற்தொகுதியில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினியை உபயோகித்து இரண்டு வேளையும் பற்தொகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஒக்ஸைடு அல்லது குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும்.

மிக முக்கியமாக ஒவ்வொரு நாளும் பல்துக்கி மற்றும் பிளாஸ்டிக் கரண்டி அல்லது வுழழவா ளஉயசயிநச உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிச்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.

புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg