Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முழு உடலுக்கும் பயன் தரும் வெர்டிகல் க்ரஞ்ச் பயிற்சி

In
Updated: 07:44 GMT, Jun 13, 2016 | Published: 07:32 GMT, Jun 13, 2016 |
0 Comments
1187
icon_com
This post was written by :
Vertical crunch

தற்பொழுது வயது வித்தியாசம் இன்றி அதிகமானவர்கள் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிக பருமன் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை என்பன முக்கிய காரணங்களாக உள்ளன.

முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள வெர்டிகல் க்ரஞ்ச் எனப்படும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 1 மாதத்தில் முதுகு வலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

முதலில் தரையில் நேராக படுத்து கொண்டு இரண்டு கால்களையும் 90 பாகைக்கு உயர்த்தவும். இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும். இந்த நிலையில் உடலை உயர்த்தி கால் விரல்களை தொட முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது. நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியினை செய்வதனால் கால் நரம்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் நல்ல வலிமை கிடைக்கும். வயிற்றுத் தசைகள் உறுதியடையும். மொத்த உடலுக்கும் இந்த பயிற்சியால் சிறந்த சக்தி கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg