Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டாடா நிறுவன தலைமை பதவிகளுக்கு 300 பெண்கள்

In வணிகம்
Published: 07:58 GMT, Jun 13, 2016 |
0 Comments
1129
icon_com
This post was written by :
Tata

இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் நாடு முழுவதுமான பல தலைமைப் பதவிகளுக்கு 300 பெண்களை நியமிப்பதற்கான புதிய திட்டமொன்றை அந்நிறுவனம் கொண்டுவந்தள்ளது. இது இந்தநியாவில் பெண்களை தலைமை பதவிக்கு அமர்த்தும் முதல் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

இந்திய முழுவதுமாக டாடா குழும நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பெண் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். எனினும், தலைமை பதவிகளில் பெண்கள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளனர். இந்நிலையில் இதனை நிவர்த்தி செய்ய நாடு முழுவதும் திறமைவாய்ந்த பெண்களை தெரிவு செய்து பயிற்சிகளை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கருத்து தெரிவிக்iகையில், ‘பெண் ஊழியர்களின் திறமையை கண்காணித்து அவர்களில் 300 பேரை தெரிவு செய்து தலைமை பதவிகளுக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆண்களுக்கு ஈடாக திறமையான பெண்கள் உள்ளனர் என்பதால் சமமாக பொறுப்புகளில் அமர்த்த உரிய முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg