Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்டமடைந்துள்ள 24 தேயிலை ஏற்றுமதி நிறுவனங்கள்

In வணிகம்
Updated: 09:42 GMT, Jun 13, 2016 | Published: 08:36 GMT, Jun 13, 2016 |
0 Comments
1222
This post was written by :

இலங்கையில் செயற்பட்டு வரும் 24 தேயிலை ஏற்றுமதி நிறுவனங்கள் நட்டத்தை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை இலங்கை தேயிலை ஏற்றுமதி ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் அசாதாரண காலநிலையின் காரணமாக தேயிலை உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி என்பவற்றில் பாரியளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் தேயிலைத் துறை பாரிய இழப்புகளை எதிர்கொண்டது.

கடந்த சில வாரங்களாக நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக சுமார் 1.6 பில்லியன் கிலோ தேயிலை வீணானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், காலநிலை சீரின்மையினால் தேயிலை தொழிற்சாலைகளில் பணி புரியும் தோட்டத் தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg