Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெய் பாயாசம்

In
Updated: 04:02 GMT, Jun 14, 2016 | Published: 04:01 GMT, Jun 14, 2016 |
0 Comments
1226
icon_com
This post was written by : Shailu
ghee Payasam

தேவையான பொருட்கள்

அரிசி – 1 கப்
வெல்லத்தூள் – 2 1/2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை
பொடித்த நறுக்கிய தேங்காய் – 1 பிடி.

செய்முறை

பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு நறுக்கிய தேங்காயை சிவக்க வறுக்கவும். அரிசியை கழுவி பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து இறக்கவும்.

பின்னர் வெல்லத்தில் 1/4 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். அதை வடிகட்டி பாகுபதம் வந்தவுடன் வெந்த சாதத்தை போட்டு குழைக்கவும். நன்றாக குழைந்ததும் 3 தேக்கரண்டி நெய் விட்டு மிதமான தீயில் நன்றாக கிளறவும்.

அதில் வதக்கிய தேங்காயையும், ஏலக்காய்த்தூளையும் சேர்த்து நன்றாக கிளறி, எல்லாம் சேர்ந்து பாயாச பதத்தில் வரும்போது இறக்கி வைக்கவும். தற்போது சுவையான நெய் பாயாசம் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg