Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பால் பலகாரம்

In
Updated: 04:15 GMT, Jun 14, 2016 | Published: 04:15 GMT, Jun 14, 2016 |
0 Comments
1238
icon_com
This post was written by : Shailu
paal palagaaram

தேவையான பொருட்கள்

பச்சரிசி, உளுந்து – தலா ஒரு கப்
பால் – அரை லிட்டர்
திக்கான தேங்காய் பால் – ஒரு டம்ளர்
சீனி – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை

பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.

பாலைக் காய்ச்சி இறக்கி சிறிது ஆறியதும் தேங்காய் பால், சீனி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில், எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும்.

மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பின்னர் பொரித்து வைத்த பலகாரங்களை பாலில் போட்டு 10 நிமிடத்திற்கு பின்னர் பரிமாறவும். தற்போது சுவையான பால் பலகாரம் தயார்…!

குறிப்பு

மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும். விருப்பப்பட்டவர்கள் முந்திரி, பாதாம் சேர்த்துக்கொள்ளலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg