Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திராட்சையின் மருத்துவ குணங்கள்

In
Updated: 04:38 GMT, Jun 14, 2016 | Published: 04:36 GMT, Jun 14, 2016 |
0 Comments
1313
icon_com
This post was written by : Shailu
grapes

பழ வகைகள் என்றாலே ஒவ்வொரு பழத்திற்கும் தனி மருத்துவ குணங்கள் உண்டு அந்த வகையில், தினமும் ஏதாவது, ஒரு பழத்தை சாப்பிடுவது, உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமன்றி அழகையும் தரும் .

அந்த வரிசையில், திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில், பல வகையான திராட்சைகள் காணப்படுகின்றது. அதில், நமக்கு அதிகம் பரிச்சயமானது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது.

பசி இல்லாமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி பச்சை திராட்சையை உண்டுவர பசியை தூண்டும். ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி பச்சைத் திராட்சைக்கு உண்டு.

உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் திராட்சை பழம மாமருந்தாகிறது. திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும்.

இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். இது குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சீனியை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும். தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மனோ தைரியம் ஏற்படும்.

உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் பச்சைத் திராட்சைப் பழம் ஏற்றது. சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை பச்சைத் திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.

தினசரி பச்சைத் திராட்சைச் சாறுடன் சீனி கலந்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட கூடாது.

இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு பச்சைத் திராட்சை மருந்தாகும். காலை உணவுக்குப் பின்னர் தினசரி பச்சை திராட்சை சாப்பிட்டு வர வீக்கம் குணமடையும் இருதயம் பலப்படும். எலும்புகள், பற்கள் கெட்டிப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg