Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்த வருட இறுதிக்குள் தங்கத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்

In வணிகம்
Updated: 06:04 GMT, Jun 14, 2016 | Published: 06:03 GMT, Jun 14, 2016 |
0 Comments
1166
icon_com
This post was written by : Shailu
Gold

இந்த வருட இறுதிக்குள் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்வது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்த ஆண்டு தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டொலருக்கு அடுத்த படியாக, பொது சர்வதேச மாற்று நாணயமாக தங்கம் கருதப்படுகின்ற நிலையில், உலக நாடுகள் தங்கள் கையிருப்பில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தங்கமாக வைத்திருப்பதை பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாக கடைபிடிக்கப்படுகின்றது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த தங்க வர்த்தகத்தில் 40 சதவீதம், ஆசிய நாடுகளில் மட்டுமே இடம்பெறுகின்ற போதிலும், இதில் சீனா மற்றும் இந்தியாவுலேயே தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதோடு, விற்பனை செய்யவும் படுகின்றது.

சமீபகாலமாக தங்கத்தில் முதலீடு செய்வது இலாபமாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகின்ற நிலையில், இதன் அடிப்படையில் கடந்த 2 வருடங்களில் மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றது. இதனடிப்படையில் தங்கத்தின் விலையானது 1,307 டொலர்களைக் காட்டிலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg