Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய இணைய வழி சேவையை ஆரம்பித்துள்ள சிங்கர்

In வணிகம்
Updated: 06:37 GMT, Jun 14, 2016 | Published: 06:36 GMT, Jun 14, 2016 |
0 Comments
1201
icon_com
This post was written by : Shailu
Singer

சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி, வீட்டு இலததிரனியல் சாதனங்களை எவ்வாறு முறையாக பயனபடுத்துவது தொடர்பில் தகவல்களை வழங்க புதிய வழிமுறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது என்னவென்றால், சிங்கர் வாடிக்கையாளரகளுக்கும், பொதுமக்களுக்கும் உதவும் முகமாக “Show Me How”  என்ற ஒரு பிரத்தியேகமான YouTube ஊடகம் மற்றும் ஸ்மார்ட்போன் App ஆகயவற்றை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் நுகர்வோருக்கு நல்ல தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காகவே முதன்முறையாக இந்த முறைமை ஆரம்பிக்கட்டுள்ளது.

இதன் மூலம் இணையததளம் வழியாக பல்வேறு உற்பத்திகள் தொடர்பான விளக்கங்களுடன் சிங்கர் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு முன்னெடுப்பான “Singer – Show Me How” என்ற இணையத்தளத்தை தொடங்கியுள்ளது.

இதனூடாக நுகர்வோர் தமது வீட்டு இலத்திரனியல் சாதனங்களை சரியான வழியில் உள்ளிணைப்பு செய்துகொள்ளவும், நேரத்தையும், பணத்தையும் மீதப்படுத்தும் வகையில் அவற்றை எவ்வாறு திறன்மிக்க வழியில் உபயோகிப்பது என்பது தொடர்பாகவும் வழிகாட்டல் தகவல்களை வழங்குகின்றது.

மேலும் இங்குள்ள வீடியோக்கள் முறையற்ற பாவனையால் அவற்றிற்கு ஏற்படக்கூடிய சேதங்களிலருந்து அவற்றைப் பாதுகாத்து, அதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg